Tuesday, March 31, 2015

“நான் அமீர்கானின் ரசிகன்” - சொல்வது ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான்..!

உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கும் ஹீரோக்களில் ஜாக்கிசானும் ஒருவர். காமெடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே ஜாக்கி அவரது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுபவர்.

அதனாலேயே இன்றும் கூட ஆசிய சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். அப்படிப்பட்ட ஜாக்கிசான் நம்ம ஊர் சூப்பர் ஹீரோக்களில் பலரும் ஜாக்கிசான் ரசிகர்களாக இருக்க, ஜாக்கிசானுக்கு பிடித்த இந்திய நடிகர் யார் தெரியுமா.? பாலிவுட் நடிகர் அமீர்கான் தான்.

சமீபத்தில் வெளியான ஜாக்கிசான் நடித்த 'ட்ராகன் பிளேடு' படம் குறித்த பேட்டி ஒன்றின்போது, அவரிடம் பாலிவுட் படங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

தான் பாலிவுட் படங்களை தொடர்ந்து பார்ப்பதில்லை என்றாலும் பார்த்தவரையில் தன்னைக்கவர்ந்தவர் என்று அமீர்கானையே குறிப்பிட்டுள்ளார் ஜாக்கிசான்.

அதற்கு முக்கிய காரணமாக அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படத்தை தான் விரும்பி பார்த்து ரசித்ததாகவும் சொல்லியிருக்கிறார். அந்தப்படம் ஹாங்காங்கில் மிகப்பெரிய ஹிட் என்றும், அதிலிருந்து, தான் அமீர்கானின் ரசிகன் ஆகிவிட்டேன் என்றும் கூறியுள்ளார் ஜாக்கிசான்.

No comments:

Post a Comment