Tuesday, March 31, 2015

என்னமோ ஏதோ... எனக்கு மட்டும் இப்படி நடக்குது...! கௌதம் மேனன்.

என்னை அறிந்தால் படத்தின் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட்டார் கௌதம் மேனன். தற்போது சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் முடிந்த கையோடு அடுத்து விக்ரமுடன் இணையவுள்ளார். மேலும், சில வருடங்களுக்கு முன் விஜய்யுடன், யோகன் அத்தியாயம் என்ற படத்தை கௌதம் இயக்குவதாக இருந்தார்.

அந்த படம் பாதியிலேயே நின்றது, இதற்கு கௌதம் ‘நான் எந்த படம் எடுத்தாலும், பாதி கதையை தான் கதாநாயகர்களிடம் கூறுவேன். ஆனால், விஜய் என்னிடம் முழுக்கதையையும் கேட்டார், நானும் கூறினேன்.

ஆனால், என்ன காரணமோ அந்த படம் நின்றது. மீண்டும் கண்டிப்பாக விஜய்யுடன் ஒரு புதுக்கதையில் இணைவேன்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment